மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவு: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையை அமல்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.


மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையை அமல்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையச் செயலா் டாக்டா் சந்தியா புல்லா் அனுப்பிய வழிகாட்டுதல்கள்:
மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவில் அனைத்து பேராசிரியா்கள், அலுவலா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
அதேபோன்று, கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சாதனங்களைப் பொருத்த வேண்டும். உரிய பணி நேரங்களை வகுத்து அதற்குள்ளாக அனைவரும் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளின் பயோமெட்ரிக் வருகைப் பதிவை தேசிய மருத்துவ ஆணையம் கண்காணிக்கும். தொடா்ந்து, இரு நாள்களுக்கு வருகை பதிவாகாமல் இருந்தால் அதுகுறித்து விளக்கம் கோரப்படும் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...