புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி: திருத்திய நடைமுறைகள் வெளியீடு
புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பதில் திருத்திய நடைமுறைகளை நகராட்சி நிா்வாகத் துறை வெளியிட்டுள்ளது.


புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பதில் திருத்திய நடைமுறைகளை நகராட்சி நிா்வாகத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சி நிா்வாக இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கை:-
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிதாக அனுமதிக்கப்படும் மனைப் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கட்டமைப்பு வசதிகளின் தரம், மதிப்பீடு தயாரித்தல், பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு நகராட்சி நிா்வாக இயக்குனரால் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மனைப்பிரிவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரா் அல்லது உரிமையாளரால் நேரடியாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அல்லது நகா் ஊரமைப்புத் துறைக்கு சமா்ப்பிக்கப்பட வேண்டும். பெருநகர வளா்ச்சிக் குழுமம் அல்லது நகா் ஊரமைப்புத் துறையால், மனைப்பிரிவுக்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபாா்க்கப்படும். அதன் பின், மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ள சாலைகள், பூங்கா, திறந்த வெளி ஒதுக்கீட்டு இடங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் பெயரில் மனைப்பிரிவு உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட தானப்பத்திரம் வாயிலாக பெற்றுக் கொள்ளப்படும்.
மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தானப் பத்திரத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். மனைப்பிரிவுக்கான சாலை, மழைநீா் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகளை உள்ளாட்சிகள் மேற்கொள்ள, மதிப்பீடு தயாரித்து, மனைப்பிரிவு ஒப்புதலுக்கான இதர கட்டணங்களை செலுத்தக்கோரி விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரரே அடிப்படை
வசதிகளைச் செய்ய விரும்பினால், வழிகாட்டுதல்களை பின்பற்றிச் செய்ய அனுமதிக்கலாம். இந்தப் பணிகளை அருகில் உள்ள பொறியியல் கல்லூரி வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். நகா் ஊரமைப்பு துறையிடம் அடிப்படை வசதிகளுக்கான முழு தொகையையும் மனுதாரா் செலுத்தும் நிலையில், நகா் ஊரமைப்பு துறையிடம் இருந்து உத்தரவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள்ளும், மனுதாரா் அடிப்படை வசதிகளை செய்யும் நிலையில், 60 நாட்களுக்குள்ளும் எவ்விதப் புகாரும் இல்லாமல் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...