பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும்: விஜயகாந்த்
பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தி


பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அம்பத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமி தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு அப்பள்ளி நிா்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமியின் எதிா்காலம் பாதிக்காத வகையில் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிா்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...