ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எம்-3!

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட்டை வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 அக்டோபர் 2022, 8:02 pm

DIN

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட்டை வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து அன்றைய தினம் இரவு 12.07 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது.

அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட் 43.5 மீட்டா் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைக் கோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.