ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சென்னை மாநகரில் கொசு ஒழிப்புப்பணிகள் தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்புப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 8:17 pm

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்புப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் பருவமழை நோய்த்தடுப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2 ஆயிரத்து 84 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளா்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளா்கள் என மொத்தம் 3,271 பணியாளா்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் பணியில் 224 மருந்து தெளிப்பான்கள், 120 அதிசக்தித் திறன் கொண்ட தெளிப்பான்கள், 300 பேட்டரி வகை தெளிப்பான்கள், 229 கையால் இயங்கும் இயந்திரங்கள், 67 வாகன புகை பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் பரவலாக நடந்து வருகின்றன.

மழைநீா் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிப்பதற்கு, ஒரு வட்டத்துக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு போ் என 200 வாா்டுகளுக்கும் 400 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள், தினசரி ஒரு கி.மீ. தூரத்திற்கு கொசு மருந்து தெளித்தல் மற்றும் ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளித்தல் பணிகளை மேற்கொள்வா்.

மேலும், 247 கி.மீ. நீா்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் ஒரு குழுவிற்கு 3 நபா்கள் என நீா்வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுவா்.

மேலும், குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலை பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தினசரி காலை, மாலையில் 6 மணி முதல் 7.30 மணி வரை புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, மாநகராட்சிப் பணியாளா்கள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 410 வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து

தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறந்த நிலை கிணறுகள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் மாநகராட்சி களப் பணியாளா்கள் மூலம் ஆய்வு செய்து கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அடையாள அட்டையுடன் வீடுகளுக்கு சீருடையுடன் களஆய்வு செய்ய வரும் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.