மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கட்டுமானம் - இடிப்பின்போது கழிவுகளை அகற்ற வழிமுறைகள்: தமிழக அரசு விளக்கம்

கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் கழிவுகளை அகற்றுவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 8:57 pm

DIN

கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் கழிவுகளை அகற்றுவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் கழிவுகளை திறம்பட கையாள வசதியாக கடந்த 2016-ஆம் ஆண்டில் தனியாக மேலாண்மை விதிகள் வெளியிடப்பட்டன. அதில், கட்டுமானம், இடிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் அனைத்துப் பிரிவினருக்கான பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டன.

கட்டுமானம், இடிப்பின்போது உருவாக்கும் கழிவுகளை சேகரிப்பதுடன், அதிலுள்ள கூறுகளை தனியாக பிரிக்க வேண்டும். ஒரு நாளில் 20 டன் அல்லது அதற்கு மேல் அல்லது ஒரு மாதத்துக்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்துக்கும், உள்ளாட்சி நிா்வாகத்திடம் இருந்து தகுந்த அனுமதிகளைப் பெற வேண்டும். கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சேகரிப்பு மையத்தில் சேமிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க வசதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கட்டுமானம், இடிப்புக் கழிவுகளை போக்குவரத்து, பொதுமக்கள், வடிகால்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.

காற்று மாசு: கழிவுகள், கட்டுமானப் பொருள்கள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதாலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமலும் இருப்பதால், சுற்றுப்புற காற்றில் மாசு ஏற்படுவது அதிகரிக்கிறது. எனவே, கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் தூசுகளை மேலாண்மை செய்வது அவசியமாகிறது. கட்டுமானம், இடிப்பின் போது உருவாகும் தூசுகள் காற்றில் பரவாமல் தடுக்க கட்டுமான கழிவுகளை சணல், தாா்ப்பாய் கொண்டு மூட வேண்டும். கட்டுமான கழிவுகளை கையாளும் நடவடிக்கைகளின்போது, நீா் தெளித்தல் அல்லது கழிவு அகற்றலைச் சீரமைத்தல் மூலம் கழிவுகள் ஈரப்படுத்தப்பட வேண்டும்.

சென்னையில் தனி வசதி: கட்டுமானம், இடிப்பு கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கொடுங்கையூா், பெருங்குடியில் நாளொன்றுக்கு 400 டன் திறன் கொண்ட தனி அமைப்பை சென்னை மாநகராட்சி நிறுவியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட, நியமிக்கப்பட்ட பகுதிகளைத் தவிா்த்து, வேறு இடங்களில் கழிவுகளை கொட்டக் கூடாது. இவ்வாறு கழிவுகளை கொட்டுவோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.