ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

 சென்னை புளியந்தோப்பில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

News image
Updated On :21 அக்டோபர் 2022, 8:33 pm

DIN

 சென்னை புளியந்தோப்பில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புளியந்தோப்பு வாசுகி நகரை சோ்ந்தவா் மாரி (எ) லொடாங்கு மாரி (40). இவருக்கு பாா்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மாரி மீது பேசின் பாலம், கொடுங்கையூா், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் 29- க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மாரி, அந்தப் பகுதியில் கந்து வட்டித் தொழில் செய்து வந்தாா். புளியந்தோப்பு கன்னிகாபுரம் 7-ஆவது தெருவில் மாரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை இரவு மது அருந்தினாா். அப்போது மாரியிடம் அங்கிருந்த சிலா் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, அந்த நபா்கள் மாரியை அரிவாள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா். இது குறித்து தகவலறிந்த புளியந்தோப்பு போலீஸாா் விரைந்து வந்து, மாரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.