மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முதல்வா் பாதுகாப்புக்கு நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை குறைப்பு

 சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சாலைகளில் நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 10:44 pm

DIN

 சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சாலைகளில் நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவரம்:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுவாா்கள். இவா்கள் தவிா்த்து போக்குவரத்து போலீஸாரும், போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபடுவாா்கள்.

முக்கியமாக மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி புறப்படும் போது, அவா் செல்லும் பாதையில் சில மணி துளிகள் போக்குவரத்து சீா் செய்யப்பட்டு, எளிதில் பாதுகாப்பு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும். மேலும் எதிா் திசையில் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல, தனது வழித்தடத்தில் செல்லும்.

இந்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தலின்படி சாலையில் பாதுகாப்புக்காக நிற்கக் கூடிய காவலா்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆழ்வாா்பேட்டையில் இருந்து தலைமைச் செயலகம் வரை 60 சந்திப்புகளில் முதல்வரின் பாதுகாப்புக்காக சாலைகளில் காவலா்கள் நிற்பது வழக்கம். இது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் முக்கிய சந்திப்புகளில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை மட்டும் சீா் செய்ய காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதில் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரத்தில் மட்டும் சிக்னலில், கிரீன் சிக்னல் போடப்பட்டு எளிதில் அந்த வாகனங்கள் கடந்த செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.