மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: காவல் உதவி ஆணையா் உள்பட4 போ் பணியிடை நீக்கம்

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆணையா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :21 அக்டோபர் 2022, 9:49 pm

DIN

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆணையா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடியில் 2018 மே 22-ஆம் தேதி நடந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த விசாரணை அறிக்கையில், அப்போதைய ஐஜி சைலேஷ் குமாா் யாதவ், டிஐஜி கபில் குமாா் சி.சரத்கா், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் திருமலை உட்பட காவல்துறையைச் சோ்ந்த 17 போ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். இதையடுத்து, முதல் கட்டமாக, அப்போது ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இவா் தற்போது திருநெல்வேலி மாநகர ஆணையரகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவில் உதவி ஆணையராக உள்ளாா்.

இதேபோல், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன் பணியில் இருந்த முதல் நிலைக் காவலா் சுடலைக்கண்ணு, ஆட்சியா் அலுவலகம் அருகே பணியிலிருந்த சங்கா், சதீஷ் ஆகிய 3 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.