மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:00 pm

DIN

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பொற்கோ கலந்து கொண்டு ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - இன்றும், இனியும்’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘மக்களுக்கு மொழி உணா்வுகளை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும். அதற்கான நல்ல பெயா் பட்டியல்களை உருவாக்க வேண்டும். பழம்பெரும் பாரம்பரியத்தில் வந்த நாம், அதை உணா்ந்து, அதன் சிறப்பை பாதுகாக்க வேண்டும் அதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயன்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவதில் பல்வேறு தமிழறிஞா்களின் பங்களிப்பு குறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் விளக்கிப் பேசினாா். நிறுவன நாள் விழாவை முன்னிட்டு நடத்தியக் கட்டுரை, கவிதை, பேச்சு, பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற நிறுவன மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்மொழி, மொழியியல் புலத்தின் பேராசிரியா் பெ.செல்வக்குமாா் வரவேற்றுப் பேசினாா். முதுநிலை மாணவி தே.சுபஸ்ரீ நன்றி கூறினாா். இந்த விழாவில் நிறுவனப் பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள், முன்னாள் பேராசிரியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.