
பொய் வழக்கில் கைதானவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளான முருகன் என்பவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமநாதன், உதவி ஆய்வாளர் கென்னடியிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவறான குற்றச்சாட்டு மூலம் முருகனை கைது செய்து துன்புறுத்தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
2009-ல் பொய் திருட்டு வழக்கில் கைதான முருகனுக்கு 8 வாரத்தில் இழப்பீடு தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.