கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வாரத்தின் மோசமான நாள் திங்கள்கிழமை! அப்போ...சிறந்த நாள்? - கின்னஸ் அறிவிப்பு!

வாரத்தின் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்று நினைப்பதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :22 அக்டோபர் 2022, 8:19 am

DIN

வாரத்தின் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்று நினைப்பதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்று இந்நிறுவனம் கூறியிருந்தது.

வாரத்தின் 7 நாள்களில் ஒவ்வொரு நாளும் மக்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் விடுமுறை என்பதால் கொண்டாட்டம்தான். திங்கள்கிழமை வாரத்தின் முதல் அலுவலக நாள் வேலை நாள் என்பதால் பலருக்கும் சலிப்பாகத்தானிருக்கும். 

இந்நிலையில்தான் கின்னஸ் உலக சாதனை நிறுவனம், வாரத்தின் மிக மோசமான நாள் 'திங்கள்கிழமை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது. 

நெட்டிசன்கள் பலரும் இதனைப் பாராட்டி, பகிர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கின்னஸ் நிறுவனத்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதைத் தொடர்ந்து கின்னஸ் நிறுவனம் இன்று, வாரத்தின் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்று நினைப்பதாக பதிவிட்டுள்ளது. இதற்கும் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னைக்கு ட்ரெண்டிங் இதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.