கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேட்டூர் அணை நீர்வரத்து 1.05 லட்சம் கன அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 1,05,000 கன அடியாக நீடித்து வருகிறது. 

News image
மேட்டூர் அணை
Updated On :22 அக்டோபர் 2022, 3:57 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 1,05,000 கன அடியாக நீடித்து வருகிறது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மூன்றாவது நாளாக வினாடிக்கு 1,05,000 கன அடியாக நீடிக்கிறது.

இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 1,05,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 83,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 17.20 மி.மீ. மழை பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.