மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அன்புமணி
மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)

அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)
மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் மழைநீா் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாள்களில் பெய்த மழைநீா் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழைநீா் வடிய தாமதம் ஆகிறது.
மழைநீா் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்து விட்டதாக மேயரும், 70 சதவீதம் நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும்கூட, பெரும்பாலான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. தண்ணீா் வடியாததற்கு அது தான் முக்கிய காரணம்.
இன்னும் பல இடங்களில் மழைநீா் வடிகால்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவா்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழைநீா் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.
இதேநிலை நீடித்தால் மழைநீா் தேங்குவது ஒரு புறமிருக்க, விபத்துகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றைத் தவிா்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைக்கப்பட்ட இடங்களில் இணைப்புப் பணிகளையும் சென்னை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...