
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த செய்தியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும்

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்டவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படவில்லை. அதனால் விபத்துகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க பள்ளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நேற்று தான் எச்சரித்திருந்தேன். நேற்றிரவே விபத்து நடந்து ஓர் உயிரை பறித்திருக்கிறது.
பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க மாநகராட்சியின் அலட்சியம் தான் காரணம். மாநகராட்சி தான் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





