கார் சிலிண்டர் வெடிப்பு: கோவையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.
Published on
Updated on
1 min read

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜமேஷா முபின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உக்கடம், டவுன் ஹால் மற்றும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து அவர் உள்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ளனர். 

இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்த 5 நபர்கள்
கைது செய்த 5 நபர்கள்

வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை கைது தனிப்படை காவல்துறையினர் செய்துள்ளனர். இந்த நிலையில் ஜமேஷா முபின் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. 

முகமது தல்கா  (25) , முகமது அசாருதீன் வயது (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் வயது (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26).  இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர்  பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைபற்றப்பட்டன. 

ஜமேஷா முபினுக்கு கார் தந்தது யார் மற்றும் அவரது பிண்னணி என்ன என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com