கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேட்டூர் அணையின் நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது.

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :25 அக்டோபர் 2022, 5:09 am

DIN

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்ததால் நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனாடியாக குறைந்தது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது . 

இன்று காலை இரண்டாவது நாளாக நீர்வரத்து 50,000 கன அடியாக நீடிக்கிறது. அணைக்க வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 28,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.