வெள்ளக்கோவில் அருகே தாய், மகள் மாயம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே தாய், மகள் மாயமானது குறித்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே தாய், மகள் மாயமானது குறித்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளக்கோவில் மூலனூர் சாலை புதுப்பை தங்கமேடு காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (40). இவருடைய மனைவி ரேவதி (35). மகள் யுவாஷினி (16). கணவர் சிவநாதபுரம், மனைவி நாச்சிபாளையத்திலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தனர். யுவாஷினி புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறார்.
கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு இருவரும் 6 மாதமாக பேசிக் கொள்வதில்லை. ஆனால் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ரேவதி, யுவாஷினி இருவரும் மாயமாகி விட்டனர்.
இதையும் படிக்க: மேட்டூரில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை!
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...