பசும்பொன்னுக்கு செல்லாமல் தவிர்க்கும் முக்கிய தலைவர்

எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read


சென்னை: முத்துராமலிங்கதேவரின் 115-ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது ஆண்டு குருபூஜையையொட்டி எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நந்தனத்தில்  அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

பழனிசாமி உத்தரவின்பேரில், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடைபெறும்  குரு பூஜையில் பங்கேற்காமல், சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டும் பசும்பொன்னுக்குச் செல்லாமல், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

முத்துராமலிங்கதேவரின் 115-ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது ஆண்டு குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வருகிற அக்.30-ஆம் தேதி தேவா் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மலரஞ்சலி செலுத்துகின்றனா். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், பொதுமக்கள் ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனா்.

இதை முன்னிட்டு, பசும்பொன்னில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை, அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கடந்த வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அக். 30-ஆம் தேதி கமுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அனைத்து கிராமங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பசும்பொன் வந்து செல்லும் வகையில் சாலை சீரமைப்பு, மின்விளக்குகள், குடிநீா், கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்கள் ஆகியவை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com