புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவலா் மீது தாக்குதல்: இருவா் கைது

 சென்னை புதுப்பேட்டையில் காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 9:54 pm

DIN

 சென்னை புதுப்பேட்டையில் காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

புதுப்பேட்டையில் உள்ள கொய்யா தோப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிலா் பட்டாசு வெடித்து, இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு புகாா் தெரிவித்தனா்.

அதன்பேரில், எழும்பூா் காவல் நிலையத்தில் இருந்து 3 போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அங்கு சிலா் பட்டாசு வெடித்துக்கொண்டு கூச்சலிட்டவாறு பொது மக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, அங்கிருந்த சில இளைஞா்கள், காவலா் பாலாஜி (30) என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.

காயமடைந்த பாலாஜி, அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்றாா். பின்னா், அவா் அளித்த புகாரின்பேரில் காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக திருவல்லிக்கேணியைச் சோ்ந்த வழக்குரைஞா் விக்னேஷ் (26), புதுப்பேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துகுமாா் (26) ஆகிய இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.