ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு!
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வானது பற்றி...

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் (கோப்புப் படம்) - PTI
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அவர் கூறியபடியே பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் பிகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளதால் அவர் இன்னும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை.
சட்டப்பேரவை, சட்டப்பேரவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்து நான் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் நிதீஷ் குமார் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2. 30 மணிக்கு நிதீஷ் குமாருக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்டுள்ளது.
நிதீஷ் குமார், தொடர்ந்து 4 ஆவது முறையாக கட்சியை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Bihar CM Nitish Kumar re-elected as the president of JD(U)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








