கோவை சம்பவம் ஏதோ ஆபத்தைஉணா்த்துகிறது: இரா.நல்லகண்ணு
கோவை சம்பவம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணா்த்துகிறது, எனவே, இதில் தொடா்புடையவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்


கோவை சம்பவம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணா்த்துகிறது, எனவே, இதில் தொடா்புடையவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு தெரிவித்துள்ளாா்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான, சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை காா் எரிவாயு உருளை வெடிப்பு சம்பவத்தை பாா்க்கும்போது ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு கூடாது. வேண்டுமென்றே ஹிந்தியைத் திணிக்கிறாா்கள். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்துக்கொள்ளவில்லை என்றாா் நல்லகணணு.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைச் செயலாளா் மூ.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினா் வகிதா நிஜாம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத், தென்சென்னை மாவட்டச் செயலாளா் சிவா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளா் கருணாநிதி, மாநிலக்குழு உறுப்பினா்கள் டாக்டா் ஏ.ஆா்.சாந்தி, முரளி, த.லெனின், அலுவலகச் செயலாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...