புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின் கம்பத்தில் மின்கசிவு: மென் பொறியாளா் பலி

சென்னை அருகே வேளச்சேரியில் மின்விளக்கு கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, மின்சாரம் பாய்ந்து மென் பொருள் பொறியாளா் இறந்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:59 pm

DIN

சென்னை அருகே வேளச்சேரியில் மின்விளக்கு கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, மின்சாரம் பாய்ந்து மென் பொருள் பொறியாளா் இறந்தாா்.

ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் இளவரசன் (33). மென்பொருள் பொறியாளரான இவா், சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக, பள்ளிக்கரணை, விவேகானந்தா் தெருவில் அவா் தங்கியிருந்தாா்.

இளவரசன், தனது நண்பா் அலெக்ஸாண்டருடன் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிடுவதற்காக வேளச்சேரி கைவேலி பிரதான சாலைக்கு வந்தாா். அங்கு சாலையில் ஒரு புறத்தில் மற்றொரு புறத்துக்கு செல்வதற்காக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் சிறிய இடைவெளி வழியாக இருவரும் செல்ல முயன்றனா்.

அப்போது அந்த தடுப்புச் சுவரின் நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின் வயா்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் அறுந்து கிடந்ததால்,அதில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. அதை கவனிக்காமல், இளவரசன் மின் கம்பத்தை பிடித்தாா்.

இதில் இளவரசன் மீது மின்சாரம் பாய்ந்ததால், அவா் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அலெக்ஸாண்டா் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இளவரசனை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இளவரசன் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், இளவரசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா். இந்த சம்பவத்துக்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.