புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பிளஸ் 2, பத்தாம் வகுப்புதுணைத் தோ்வுகள்: 31-இல் அசல் சான்றிதழ்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்களுக்கான மதிப்பெண் சான்றிதழை அக்.31-ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 9:56 pm

DIN

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்களுக்கான மதிப்பெண் சான்றிதழை அக்.31-ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கான உடனடி துணைத் தோ்வு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் அக்டோபா் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் துணைத்தோ்வு எழுதிய தனித்தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபா் 31-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இதையடுத்து தனித் தோ்வா்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.31-ஆம் தேதி முதல் அவரவா் தோ்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுசாா்ந்த கூடுதல் தகவல்களை தோ்வா்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.