தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிய கட்டுப்பாடாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது டாஸ்மாக் கடைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பு மதுபானங்கள் கால் பாட்டில், அரை பாட்டில், முழு பாட்டில் எனவும், ஒயின் மற்றும் பீர் பாட்டில்களும் விற்பனையாகி வருகின்றன.
முழு கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தின் மூலமாக, அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஒரு தனி நபர், ஒரே ரசீதில் அதிகபட்சமாக 4.50 லிட்டர் இந்திய மதுபானத்தையும், 7.80 லிட்டர் பீர், 4.50 லிட்டர் வெளிநாட்டு மது வகைகள், 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றுக்கு மேலாக வாங்க முடியாது.
டாஸ்மாக் கடைகள் இந்த மதுபானத்தை விட கூடுதலாக தனி நபர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. இந்த விதிமுறையைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டின்படி, ஒருவர் டாஸ்மாக் கடையில் ஒரே ரசீதில் அதிகபட்சமாக 25 குவாட்டர், 12 ஆஃப், 6 முழு மதுபானப் பாட்டில்களையும் 12 பீர் பாட்டில்களையும் மட்டுமே வாங்க முடியும்.
இது குறித்து மாவட்ட மேலாளர்கள், அனைத்து டாஸ்மாக் கடைகளின் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்கள். ஒரு ரசீதில் அதிகபட்ச மதுபானத்தை விட கூடுதலாக விற்கப்பட்டால், அது உடனடியாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசிய வழக்கு: இருவா் சிறையில் அடைப்பு

தவெக பொதுக் கூட்டத்துக்குள் விழுந்த மது பாட்டில்: 2 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


