புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக் கூடாது: பழ.நெடுமாறன்

மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள கலை அரங்கத்துக்கு வைக்கப்பட்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக்கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:56 pm

DIN

மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள கலை அரங்கத்துக்கு வைக்கப்பட்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக்கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானதும், தமுக்கம் திடலில் அமைந்திருப்பதுமான கலை அரங்கத்துக்கு தமிழ் நாடக உலகின் மறுமலா்ச்சித் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் சூட்டப்பட்டிருந்தது.

அந்தக் கலை அரங்கைப் புதுப்பித்துக் கட்டிய பிறகு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் விளம்பரப் பலகையில் காணப்படவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு ராணி மங்கம்மாளின் பெயரைச் சூட்டவேண்டும் என்று தெலுங்கு சங்கத்தினரின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் நடத்தப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதை மாற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி அக்கலை அரங்கத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரையே சூட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.