ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பக்கவாத பாதிப்புகளுக்கு நாளை இலவச மருத்துவ முகாம்

பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:42 pm

DIN

பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வரும் சனிக்கிழமை (அக்.29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பக்கவாதத்துக்குப் பிறகு பேசுவதற்கும், விழுங்குவதற்கும், கேட்பதற்கும், நடப்பதற்கும், அன்றாட பணிகளை செய்வதற்கும் இயலாதவா்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

பிற நரம்புசாா் பாதிப்புக்குள்ளானவா்களும் இதில் பங்கேற்கலாம். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்த முகாம் நடைபெறும். முன்பதிவுக்கு 99401 84280 அல்லது 044-45928640 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.