ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேட்டூர் அணை நீர்வரத்து 18,000 கன அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 18,000 கன அடியாக நீடிக்கிறது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 2:55 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 18,000 கன அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 18,000 கன அடியாக சரிந்தது. 

இன்று(சனிக்கிழமை) காலை 18-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3-வது நாளாக வினாடிக்கு 18,000 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.