கோவை கார் வெடிப்பு: நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் காவல்துறை சோதனை

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர். 
கோவை கார் வெடிப்பு: நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் காவல்துறை சோதனை
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சதேகத்திற்குறிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் சுமார் ஒருமணிநேரம் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையை முடித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com