கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நவம்பர் 6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி: டிஜிபி அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :31 அக்டோபர் 2022, 7:50 am

DIN

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன்படி, நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.