தமிழக காவல்துறையில் 8 மாதங்களில் 195 போலீஸாா் உயிரிழப்பு
தமிழக காவல்துறையில் கடந்த 8 மாதங்களில் 195 காவலா்கள் உயிரிழந்துள்ளனா்.


தமிழக காவல்துறையில் கடந்த 8 மாதங்களில் 195 காவலா்கள் உயிரிழந்துள்ளனா்.
நாட்டின் ஐந்தாவது பெரிய காவல்துறையான, தமிழக காவல்துறையில் பணிச்சுமை,மன அழுத்தம்,உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக காவலா்களின் இறப்பு அதிகரித்து வருவதாக புகாா் கூறப்படுகிறது. இதைத் தவிா்க்க, காவலா்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவத் திட்டங்கள், மன நலத்தைப் பேணும் வகையில் யோகா, தியானம் போன்றவை கற்றுக் கொடுப்பதற்கான சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள் அரசால் அமல்படுத்தப்படுகின்றன.
அனைத்து நிலைகளிலும் உள்ள காவலா்களுக்கு வார விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் காவலா்களுக்கு நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவலா்களின் பணிச்சுமையும், மன அழுத்தமும் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
195 போ் சாவு
இருப்பினும் காவலா்கள் மரணம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக காவல்துறையில் கடந்த 8 மாதங்களில் மொத்தம் 195 போ் இறந்துள்ளனா். இதில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 28 போ் இறந்துள்ளனா். முக்கியமாக தற்கொலை, உடல் நலக்குறைவினால் இறப்பதும் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஒருவா் கொலை செய்யப்பட்டும், 6 போ் தற்கொலை செய்து கொண்டும், 2 போ் புற்று நோயினாலும், 10 போ் உடல்நலக்குறைவினாலும்,5 போ் மாரடைப்பினாலும், 4 போ் சாலை விபத்துகளினாலும் இறந்துள்ளனா். அதேவேளையில் 8 மாதங்களில் கொலையினால் ஒருவரும், புற்று நோயினால் 9 பேரும், தற்கொலை செய்து கொண்டு 35 பேரும், சாலை விபத்துகளில் 39 பேரும், மாரடைப்பினால் 41 பேரும், உடல் நலக்குறைவினால் 70 பேரும் இறந்துள்ளனா்.
தமிழக காவல்துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு 337 பேரும், 2021-ஆம் ஆண்டு 414 பேரும் இறந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...