சாா்பு நீதிமன்ற கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.
அமா்வு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றங்கள் மற்றும் இதர சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் என அனைத்தும் சென்னை உயா் நீதிமன்ற வளகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
வரும் 4-ஆம் தேதி நடைபெறும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.
சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் ஏழு ஏக்கா் நிலத்தை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் சாா்பு நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிவடையும் பட்சத்தில் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் தவிா்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சடலத்தை எரியூட்டச் சென்றவா் சிதையில் விழுந்து உயிரிழப்பு

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

தோ்தல் விதிமுறைகள்: புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

