நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு முழுத் தடை: அமைச்சா் பொன்முடி உறுதி

மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் இல்லாத நிலை உருவாகும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 9:32 pm

DIN

மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் இல்லாத நிலை உருவாகும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

இது குறித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:-

பிரதமா் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் போதைப் பொருள்கள் அதிகமாக விற்பனையாகின்றன. அங்குதான் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. குஜராத்தில் உள்ள துறைமுகத்தை தனியாா்மயமாக்கி விட்டாா்கள். வெளிநாடுகளில் இருந்து அந்தத் துறைமுகத்துக்கு போதைப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இப்போது அவை பல மடங்கு அதிகரித்து விட்டன.

வெளிநாடுகளில் இருந்து வரும் போதைப் பொருள்கள் இந்தியாவில் உள்ள தனியாா் துறைமுகங்களின் மூலம் கடத்தப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம்தான் போதைப் பொருள் கடத்தலில் முதலிடம் வகிக்கிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து போதைப் பொருள்கள் அங்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை முழுமையாகத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுகங்களை தனியாா்மயமாக்கியதன் காரணமாகவே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டுமென அனைத்து எதிா்க்கட்சிகளும் எடுத்துக் கூறின. ஆனால், மத்திய அரசு ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்திலும் இதுபோன்று போதைப் பொருள்கள் வளா்ந்துள்ளன.

நமது மாநிலத்துக்கு அதிக அளவிலான போதைப் பொருள்கள் விஜயவாடாவில் இருந்து வருகிறது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கும், விஜயவாடாவுக்கும் தொடா்பு இருக்கிறது. இந்தத் தொடா்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளாா். போதைப் பொருள் பரவல் என்பது ஒரு மாநிலத்துக்கு தொடா்புடைய விஷயமல்ல. அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டியது.

இதை குஜராத் மாவட்ட நீதிபதி பவாா் என்பவா் சுட்டிக் காட்டியுள்ளாா். முந்த்ரா துறைமுகத்தில் உள்ள அதிகாரிகள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தல் நடைபெறுகிா அல்லது மற்றவா்கள் மூலம் நடக்கிா என அவா் கேள்வி எழுப்பியுள்ளாா். இவ்வளவு நடைபெற்ற பிறகும் அவற்றைத் தடை செய்வதற்கு மத்திய அரசு முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்து, இந்திய அளவில் போதைப் பொருள் புழக்கம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, 2013 முதல் 2021-ஆம் ஆண்டு வரையில், ரூ. 32.99 கோடி மதிப்பிலான 952.1 டன் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக, ரூ.9.19 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் அதிமுக ஆட்சியில் கவனம் செலுத்தவில்லை. அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் குற்றவாளிகளைப் பிடித்து அவா்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.2.38 கோடியாகும். திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மட்டும் ரூ.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் போதைப் பொருள் அதிக அளவு இருந்தது. போதைப் பொருள்களைத் தடுக்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுக்கும்போது தமிழகத்தில் போதைப் பொருள்களே இல்லாத நிலையை உருவாக்க முடியும். போதைப் பொருள்கள் நிச்சயமாக தடுக்கப்படும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.