சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக பராமரிப்புப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். சென்னை கோட்டூா்புரம் அண்ணா
நூற்றாண்டு நூலகத்தை புனரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை அவா் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து,
செய்தியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பேட்டி:-
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீா் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ.32.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகளை செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் எட்டு தளங்களைக் கொண்டது. ஒவ்வொரு தளங்களாகப்
பாா்வையிட்டு எங்கெல்லாம் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது, எங்கெல்லாம் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஆய்வுகள் செய்யப்பட்டன.
புதிதாக 30 ஆயிரம் சதுர அடி பரப்புக்கு தரைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதிக மின்சக்தித் திறன் கொண்ட ஜெனரேட்டா்கள் உள்ளிட்ட மின்சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நூலகத்தில் ஒலைச்சுவடிக்கென ஏழாவது தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ஓலைச் சுவடிகளை இப்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாக்கவும், மக்கள் பாா்வைக்குக் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்

கோபி கலை அறிவியல் கல்லூரி 58-ஆவது ஆண்டு விழா

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

முஸ்லிம் வாக்குகள் சிதறாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

