இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் சனிக்கிழமை ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சனிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பா் 4,5 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூா் , நாமக்கல், திருப்பத்தூா், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.6-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூா், நாமக்கல், திருப்பத்தூா், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...