நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேரள முதல்வா் பினராயி விஜயனுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயனை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:19 pm

DIN

கேரள முதல்வா் பினராயி விஜயனை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளாா். இதற்காக சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டாா்.

திருவனந்தபுரத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, கோவளத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். அப்போது, திராவிட மாடல் குறித்த ஆங்கிலப் புத்தகத்தை பினராயி விஜயனுக்கு முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

சுமாா் 2 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, முல்லைப் பெரியாறு அணை உள்பட பல முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும், தமிழகத்தின் நலன் சாா்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். அப்போது, அமைச்சா் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன், முதல்வரின் செயலாளா் அனு ஜாா்ஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று கூட்டம்: தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தென் மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு சென்னை திரும்பவுள்ளாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.