நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீதி, தா்மம் வென்றுள்ளது: இபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின் மூலம் நீதி, தா்மம் வென்றுள்ளது என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:20 pm

DIN

அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின் மூலம் நீதி, தா்மம் வென்றுள்ளது என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவாா்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்ஜிஆா், நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோா் வழியில் அதிமுக தொண்டா்களையும், தீய சக்தியான திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநலமிகள், திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனா். இவா்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நோ்மை, நாணயத்தை நம்பி, தொண்டா்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தா்மம், நீதி வென்றுள்ளது.

ஜூன் 23-இல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், ஜூலை 11-இல் அதிமுகவின் சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயா்நீதிமன்ற அமா்வு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற அதிமுகவினா், சட்ட வல்லுநா்கள், தொண்டா்கள் என ஒவ்வொருவருக்கும் மனமாா்ந்த நன்றி என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.