தொடர் நீர்வரத்து காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணைகளைத் தாண்டி வெள்ளநீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் விவசாயிகள் ஏராளமான தங்கள் விளைநிலங்களில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 16 நாட்களில் மட்டும் 1228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசீவரம் மற்றும் மாகரல் தடுப்பணைகள் தற்போது நிரம்பி வழிந்து உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மண்டலம் அறிவித்த நிலையில், மீண்டும் பாலாறு மற்றும் செய்யாறுகளில் நீர் சென்று கொண்டிருப்பதால் விவசாய பெருமக்களும் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு இந்த வெள்ள நீர் பெரும் பயனைத் தரும் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


