ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்ஸை அனுமதிக்க கூடாது: ஓபிஎஸ் தரப்பு புகார்

அதிமுக அலுவலகத்திற்குள் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

News image
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
Updated On :8 செப்டம்பர் 2022, 4:23 am

DIN

அதிமுக அலுவலகத்திற்குள் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக  அலுவலகம் செல்கிறார். 

அதிமுக அலுவலகம் செல்லும் இபிஎஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு தர சாலைகளில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில், அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வதற்குகு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பின் புகழேந்தி இன்று காலை டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும், அதிமுக அலுவலக கலவரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில் இபிஎஸ்ஸை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு அதிமுக அலுவலகம் செல்கிறார். கடந்த ஜூன் 27 ஆம் தேதி கடைசியாக அலுவலகம் சென்ற நிலையில், 72 நாள்களுக்குப் பின்னர் அவர் தலைமை அலுவலகம் செல்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார். இந்த நிகழ்வில் திரளான தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடந்தபோது அதிமுக அலுவலத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.