சென்னை: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாட்சிமை தங்கிய இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
எழுபது ஆண்டுகள், 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கியத் திருப்புமுனைகளைக் கண்ட ஓர் ஆட்சிக்குப் பிறகு, இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்
இராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது பொது வாழ்க்கையில் கடைப்பிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார். வரலாற்றில் சிறந்த முடியாட்சியர்களில் ஒருவரான இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவினால் வாடும், இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


