
ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மி சட்ட ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை தடை செய்யக்கோரி ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதையும் படிக்க: பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.