லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா (81). வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 7:05 am

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா (81). வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வயது முதிா்வின் காரணமாகத்தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும் ஆனால் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவின் உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் உள்ளதாகவும் அவரது மகன் மனோஜும் கூறியுள்ளார். 

இந்நிலையில், பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பாரதிராஜாவிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.