மன்னார்குடியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இடத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகாகவி பாரதியார் தலைமறைவாக இருந்த இடத்தில் அமைப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் அவரது 101ஆவது நினைவு நாளையொட்டி, பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு மன்னார்குடி மேல நாகையில் உள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு மன்னார்குடி மேல நாகையில் உள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகாகவி பாரதியார் தலைமறைவாக இருந்த இடத்தில் அமைப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, அவரது 101ஆவது நினைவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கொடியாலம் வா.ரெங்கசாமி ஐயங்காருக்கு சொந்தமான பங்களா மன்னார்குடி அடுத்த மேலநாகையில் உள்ளது. இங்கு மாறுவேடத்தில் வந்த பாரதியார் 10 நாள் தங்கியிருந்துள்ளார்.

அந்த காலக் கட்டத்தில்தான், ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாடல் கருக்கொண்டதாக வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பங்களா, பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து, பாரதியார் நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் மூலம், அந்த பங்களாவை சீரமைத்து, பாரதியார் சிலையுடன் கூடிய மகாகவி பாரதியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுக்கு முன் திறப்பு விழா நடைபெற்றது.

பாரதியார் நினைவு மண்டபத்தில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது இலக்கிய அமைப்புகள், கட்சிகள், பொதுநல அமைப்பினர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பதும், இலக்கிய மற்றும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

மகாகவி பாரதியார் 101வது நினைவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு, மன்னார்குடி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளைத் தலைவர் க.தங்கபாபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நகத் தலைவர் எஸ்.சிவசுப்ரமணியன், மன்னார்குடி தமிழ்ச் சங்கத் தலைவர் டி.வி ஜயேந்திரன், மன்னை மனிதம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ராமதாஸ், ராஜமன்னை ஜேசிஐ தலைவர் சபரிராஜன், ஸ்ரீ பாரதிதாசன் அகதாமி தலைவர் ஜெ. அன் பழகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி, எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட நிர்வாகி வீ.சேதுராமன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.தாயுமானவன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.ரெகுபதி, மன்னார்குடி அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பிரபாகரன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி பிச்சைக் கண்ணு, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் பாரதி ஆர்.பூமிநாதன், துணை நிர்வாகிகள் விஜய், குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மகாகவி பாரதியார் நினைவு நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மகாகவி பாதியார் நினைவு நாளை இனி ஆண்டுதோறும் மகாகவி நாள் என் கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு செய்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com