கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திண்டுக்கல் - பழனி ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்: மக்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல் - பழனி ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 செப்டம்பர் 2022, 4:02 pm

DIN

திண்டுக்கல் - பழனி ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல் - பழனி ரயில் பாதை 58 கிலோ மீட்டர் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவுள்ளார்.

காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, மின்சார ரயில்களை இயக்குவதற்காக 25 ஆயிரம்  வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சார ரயில் இயக்கும்போது, ரயில் பாதை அருகே பொதுமக்கள் நெருங்கினால் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதால் பாதையை நெருங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்குப் பிறகு திண்டுக்கல் - பழனி இடையே மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.