தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் வகையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு செய்துள்ளது.
தமிழக கோயில்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபை, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பழமையான மற்றும் அரிய பொருள்களின் ஏல மையம், அருங்காட்சியங்கள் ஆகியவற்றை ரகசியமாக கண்காணிக்கிறது.
இதன் விளைவாக கடந்த 6 மாதங்களில் அமெரிக்க,ஆஸ்திரேலியா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அருங்காட்சியங்கள், ஏல மையங்கள் ஆகியவற்றில் சுமாா் 60 சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் தமிழகத்தில் கடந்த 1990 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் திருடப்பட்டு, கடத்தப்பட்டவை என்பதையும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் உறுதி செய்தனா்.
இந்த சிலைகளை மீட்பது குறித்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபுவிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெய்ந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆலோசனை செய்தனா். இந்த ஆலோசனையில், வெளிநாடுகளில் அருங்காட்சியங்களிலும், ஏல மையங்களிலும் உள்ள தமிழக கோயில் சிலைகளை மீட்பதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தனிப்படையினா் வெளிநாடுகளுக்கு செல்ல தமிழக அரசின் அனுமதியை காவல்துறை கோரியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படையினா், சிலைகளை மீட்க வெளிநாடுகளுக்கு செல்வாா்கள் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

அன்பும் நிறைவும்..! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்தி!

போரின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் விலை குறைப்புதான் ! - ஜே.டி. வான்ஸ் பேச்சால் அதிர்ச்சி!

காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju


