ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 8:35 am

DIN

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் தனது வீட்டிற்கு டைல்ஸ் வாங்கிவிட்டு மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமான் திரும்பிச் சென்றுள்ளார். 

அப்போது, தாராசுரம் அருகே தஞ்சை - கும்பகோணம் சாலையில் காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக காரின் முன் பகுதியில் தீ கசிந்துள்ளது. இதனை எதிரே ஒரு காரில் வந்த டிரைவர் பார்த்து அறிவுறுத்தியதால், ஆம்னி காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் இறங்கிவிட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். 

இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் இறைத்து அணைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.