அதிசய மணல் மாதா திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிசய மணல் மாதா திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது!
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் மாவட்டங்களில் புகழ் மிக்க இத் திருத்தல திருவிழா கொடியேற்றத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு புனித தணிஸ்லாஸ் இளைஞர் சபை முப்பள்ளிகள், பாடகர் குழு பீட பூக்கள் சின்னராணிபுரம் இறைமக்கள் சார்பில் திருப்பயணம் நடைபெற்றது. 

தொடர்ந்து அருள் தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் செட்டிவிளை பங்கு தந்தை ததேயுஸ் ராஜன், சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தல அதிபர் தந்தை ஜான்சன்ராஜ் கலந்துகொண்டு திருவிழா கொடியேற்றி திருப்பலி நடைபெற்றது. 

தொடர்ந்து ஜெபமாலையும் நற்கருணை ஆசீரும் நடைபெற்றன. திருவிழா நவ நாள்களில் நாள்தோறும் திருப்பலி ஜெபமாலை நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொடியேற்றத்தை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com