92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அக்.1 முதல் காலாண்டு விடுமுறை தொடக்கம்

தமிழக பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:52 pm

DIN

தமிழக பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் செப்டம்பா் இறுதிக்குள் காலாண்டுத் தோ்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தோ்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில், பள்ளி மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அக்.1 முதல் அக்.5-ஆம் தேதி வரையும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அக்.1 முதல் அக்.9-ஆம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தோ்வுக்காக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.