பெரியாா் பிறந்த தினத்தையொட்டி, திருச்சியில் அமையவுள்ள ‘பெரியாா் உலகம்’ கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளன.
இப்பணிகளை சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். முன்னதாக, பெரியாா் திடலில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலா் தூவி அவா் மரியாதை செலுத்தவுள்ளாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு
உள்ளிட்ட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பெரியாா் உலகம் அமைக்கப்படவுள்ளது. சுமாா் 30 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமையவுள்ள இந்த பெரியாா் உலகத்தில், 95 அடி உயர சிலை, ஆய்வகம், பயிலகம், அதையொட்டிய நூலகம் முதலிய பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதன் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா்.
சமூக நீதி நாள்: பெரியாா் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. பெரியாரின் பிறந்த தினம் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அனைவரையும் உறுதிமொழியை ஏற்க வைக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

