நீடாமங்கலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
பெரியாரின் பிறந்த நாள் விழா திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொண்டாடப்பட்டது.


நீடாமங்கலம்: பெரியாரின் பிறந்த நாள் விழா திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தி.க. மாவட்டச் செயலாளர் ராயபுரம் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் சக்திவேல், பகுத்தறிவு ஆசிரியர் அணி வீரமணி, ரமேஷ், திமுகவைச் சேர்ந்த நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், கே.ஆர்.கே. ஜானகிராமன், ராயபுரம் பிரகாஷ், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆதிஜனகர், நகரச் செயலாளர் இ.ஷாஜகான், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் நீலன்.அசோகன், வட்டார தலைவர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜான்கென்னடி, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், திராவிடர் கழக இளைஞர்கள் பங்கேற்றனர். அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்(தமுஎகச) நீடாமங்கலம் கிளையின் சார்பாக, பெரியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு கிளையின் தலைவர் சேது. சந்தானராமன், கிளையின் செயலாளர் சி. சண்முகம் ஆகியோர் மாலையணிவித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் சு.அம்பிகாபதி, கிளை துணைச் செயலாளர் எஸ். ரவிசந்திரன், கிளை துணைத் தலைவர் ஆர். ராஜா மற்றும் கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...